Sunday, February 24, 2008

விவசாயி

நாட்டின் முதுகெலும்பாம் விவசாயம்
அதனால் தானோ இவர்களின்
உடம்பெல்லாம் எலும்பாய் தெரிகிறதோ

காசு இருந்தால் செய்யலாம் விவசாயம்
கடன் வாங்கி செய்ய முடியுமா? விவசாயம்

இவர்களின் கைகளில் ரேகையில்லை
கால்களிலோ எண்ணற்ற ரேகைகள்

நல்ல மரம் செடிகளை வைத்துக் காப்பாற்ற
புச்சிகளோடும் களைகளோடும் எந்நாளும் போராட்டமே

இவர்களின் படுக்கை குடை வீடு
எல்லாமே வரப்பில் நிற்கும் மரம் தான்

சொத்தைக் காய்கறிகள் தன் வீட்டிற்கு
நல்ல காய்கறிகள் விற்பனைக்கு
அப்படியிருந்தும் கிடைத்துவிட்டா வாழ்க்கை?

இவர்களின் ஒரு வருட உழைப்பில்
கிடைக்கின்ற வருமானம்
ஒரு நாளில் கிடைக்கிறது
அதை வாங்கி விற்பவர்களுக்கு

விளை நிலங்கள் விலை நிலங்களாகின்றன
விலை நிலங்கள் விளை நிலங்களாகுமா?

எல்லோருடைய கனவும் வெளிநாட்டில்
இவர்களின் கனவு மட்டும் தோட்டத்திலே

இவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்
இவர்களின் வாரிசாவது இனி விவசாயம் செய்வார்களா?

No comments: