Wednesday, February 6, 2008

ஹைக்கூ

அனாதைப் பாட்டியின்
முகமெல்லாம் சிரிப்பு
பள்ளி விடுமுறை


வெளிநாட்டில் நான்
பாதுகாக்கிறது
அம்மாவின் அன்பு


சுத்தத்தைக்
கற்றுக்கொடுக்கும்
விஷப்பூச்சிகள்


கண்ணுக்குத் தெரியாத
மேடு பள்ளங்கள்
காட்டுகிறது மழைநீர்


பூமிக்கு விளக்கு சூரியன்
வீட்டிற்கு விளக்கு
பெண்


ஓடினேன்
துரத்தியது
நிழல்

வாழ்ந்து காட்டுகிறது
மரம்
பாறைகளுக்கிடையிலும்

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முதல் கவிதை ரொம்பப் பிடிச்சு இருந்தது.

தப்பா நினைச்சுக்காதீங்க..இவை எல்லாம் நீங்கள் எழுதியவையா என்று அறிய ஆவல்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

test comment

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

சின்னச் சின்ன விபரங்கள் said...

அனைத்தும் நான் எழுதியவையே.