Tuesday, August 5, 2008

காற்றே

காற்றே உன்னில் நாங்கள் நலம்
எங்களில் நீ நலமா?

காற்றே நீயும் கடவுள் தான்
கண்ணுக்குத் தெரியாததில் மட்டுமல்ல
மறைந்திருந்து நன்மை செய்வதிலும்

நீயில்லாமல் உலகம் ஏது காற்றே
நீயில்லாமல் உயிர் ஏது காற்றே

நீ சிறைப்பட்டாலும் நல்லதே செய்கிறாய்
எங்களைப் போல் இல்லாமல்

தென்றலாய் எப்போதும் தவழ்கிறாய்
உருவமில்லாமல் தொடு உணர்வாகிறாய்

மேகங்களுக்கு கால்களாய் இருப்பதும்
கதிரவனின் வெப்பத்தை குறைப்பதும்
மரங்களை அசைத்து சிரிக்க வைப்பதும்
நஞ்சையுண்டு அமிர்தத்தைக் கொடுப்பதும்
ஒலியை இசையாய் மாற்றித் தருவதும்
மின் உற்பத்திற்குப் பயன்படுவதும் நீதானே

நீயில்லாவிட்டால் வாகனங்கள் ஏது?
புகையே உனக்குப் பகைதான்
உன்னையே கலப்படம் செய்கிறோம்
நாங்கள் உணர்வது எப்போது?
நீ மரணம் ஆகும்போதா?
இல்லை எங்களின் மரணத்தை
தவணையில் ஆழ்த்தும்போதா?