Sunday, March 23, 2008

கவிதை

கிராமத்தின் விடியல்

மேகத்தாயே!
நீ எப்போது பிரசவிப்பாய்
அப்போதுதான்
கிராமத்தின் விடியல் என்று
எண்ணிக் கொண்டிருந்தோம்!

இப்போது நகரத்தைப்
பார்த்தால் தானே
தெரிகிறது அங்கே
பருவத்தின் மிதப்பிலே
நின்று கொண்டிருக்கிற
வானுயர்ந்த கட்டிடமும்
ஓடிக்கொண்டிருக்கும் வாகனமும்
வானவில்லை நாண வைக்கும்
வண்ண வண்ண
ஆடைகள்தான் நியான்
விளக்கில் ஜொலிப்பது
இப்போது நகரத்தைப்
பார்த்தால் தானே தெரிகிறது!
ஞானத்திலும் விஞ்ஞானத்திலும்
ஆக்கத்திலுமே முழ்கித்
திரிவதன் காரணம்தான்.
சுற்றுப்புறமே அங்கு வாழும் மக்களின்
ஆசையைத் தூண்டி
தானும் நலமுடன் வாழ்கிறது

கிராமமே!
நீ இன்னும் விடியாமல்
விளக்கில் வீழ்ந்த விட்டில்
பூச்சியாய் இருப்பதும்
சுற்றுப்புறமே இங்கு பசுமை என்றால்
என்ன என்று மரங்கள்
கேட்டு கேட்டு
விதவையாகி விட்டன!

இங்கு மக்கள் வாழ
எந்த ஆசையையும்
தூண்டுவதில்லை.

கிராமமே உனது
பார்வையில் தொழில் வளமும்
கல்வியும், விஞ்ஞானமும்
வந்தால் அறியாமை எனும்
நிலமை அறியாமை இருக்கும்
இது பாட்டுக்காக இசைக்கப்படும்
இசையல்ல
இது கிராமத்தின்
விடியலுக்காவே
கூவப்படும்
கிராமத்தின் ஓலம்

No comments: