Saturday, January 31, 2015

Tuesday, September 23, 2008

இயற்கையின் சீற்றம்

நம்மைக் காக்க
நாம் காப்போம்
இயற்கைக் கடவுளை

காற்று, நிலம், நீர், இவைகளில்
கலப்படம் தவிர்ப்போம்

விளை நிலங்கள்
விலை நிலமாவதை எதிர்ப்போம்

நில அரிப்பு மண் சரிவு வெள்ளம்
ஏற்படாமல் பாதுகாப்போம்

மரங்கள் வெட்டுவதைத் தடுத்து
மரம் வளர்க்கப் பாடுபடுவோம்

வானம் மாசுபடுவதை
அனைவரும் உணர்த்துவோம்

ஓசோன் மண்டலத்தில்
புற ஊதாக் கதிர்கள்
ஊடுருவலைத் தடுப்போம்

இரைச்சலால் கெடுவது
காது மட்டுமல்ல
மனமுமென்பதை உணருவோம்

கடல் அரிப்பைத் தடுக்க
நடவடிக்கை எடுப்போம்

சுற்றுப்புறம் சுகாதாரம் காப்போம்
இயற்கையின் சீற்றலுக்கு
ஆளாகாமல் இருப்போம்.

Tuesday, August 5, 2008

காற்றே

காற்றே உன்னில் நாங்கள் நலம்
எங்களில் நீ நலமா?

காற்றே நீயும் கடவுள் தான்
கண்ணுக்குத் தெரியாததில் மட்டுமல்ல
மறைந்திருந்து நன்மை செய்வதிலும்

நீயில்லாமல் உலகம் ஏது காற்றே
நீயில்லாமல் உயிர் ஏது காற்றே

நீ சிறைப்பட்டாலும் நல்லதே செய்கிறாய்
எங்களைப் போல் இல்லாமல்

தென்றலாய் எப்போதும் தவழ்கிறாய்
உருவமில்லாமல் தொடு உணர்வாகிறாய்

மேகங்களுக்கு கால்களாய் இருப்பதும்
கதிரவனின் வெப்பத்தை குறைப்பதும்
மரங்களை அசைத்து சிரிக்க வைப்பதும்
நஞ்சையுண்டு அமிர்தத்தைக் கொடுப்பதும்
ஒலியை இசையாய் மாற்றித் தருவதும்
மின் உற்பத்திற்குப் பயன்படுவதும் நீதானே

நீயில்லாவிட்டால் வாகனங்கள் ஏது?
புகையே உனக்குப் பகைதான்
உன்னையே கலப்படம் செய்கிறோம்
நாங்கள் உணர்வது எப்போது?
நீ மரணம் ஆகும்போதா?
இல்லை எங்களின் மரணத்தை
தவணையில் ஆழ்த்தும்போதா?

Sunday, March 23, 2008

கவிதை

கிராமத்தின் விடியல்

மேகத்தாயே!
நீ எப்போது பிரசவிப்பாய்
அப்போதுதான்
கிராமத்தின் விடியல் என்று
எண்ணிக் கொண்டிருந்தோம்!

இப்போது நகரத்தைப்
பார்த்தால் தானே
தெரிகிறது அங்கே
பருவத்தின் மிதப்பிலே
நின்று கொண்டிருக்கிற
வானுயர்ந்த கட்டிடமும்
ஓடிக்கொண்டிருக்கும் வாகனமும்
வானவில்லை நாண வைக்கும்
வண்ண வண்ண
ஆடைகள்தான் நியான்
விளக்கில் ஜொலிப்பது
இப்போது நகரத்தைப்
பார்த்தால் தானே தெரிகிறது!
ஞானத்திலும் விஞ்ஞானத்திலும்
ஆக்கத்திலுமே முழ்கித்
திரிவதன் காரணம்தான்.
சுற்றுப்புறமே அங்கு வாழும் மக்களின்
ஆசையைத் தூண்டி
தானும் நலமுடன் வாழ்கிறது

கிராமமே!
நீ இன்னும் விடியாமல்
விளக்கில் வீழ்ந்த விட்டில்
பூச்சியாய் இருப்பதும்
சுற்றுப்புறமே இங்கு பசுமை என்றால்
என்ன என்று மரங்கள்
கேட்டு கேட்டு
விதவையாகி விட்டன!

இங்கு மக்கள் வாழ
எந்த ஆசையையும்
தூண்டுவதில்லை.

கிராமமே உனது
பார்வையில் தொழில் வளமும்
கல்வியும், விஞ்ஞானமும்
வந்தால் அறியாமை எனும்
நிலமை அறியாமை இருக்கும்
இது பாட்டுக்காக இசைக்கப்படும்
இசையல்ல
இது கிராமத்தின்
விடியலுக்காவே
கூவப்படும்
கிராமத்தின் ஓலம்

Monday, March 10, 2008

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள. ஆனால அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேணடும். அதைச் சாதிக்க திறமை வேணடும். திட்டமிடல் வேணடும் விடமுயற்சி வேணடும் கடின உழைப்பு வேணடும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம்.


செயல் என்பது உயிரன் இசை என்றொரு பழமொழி உணடு. அதைச் செயல்படுத்துங்கள.


இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவா ஹாஸ்விட் அறிஞா.


அறிவு தான் ஆற்றல் சொன்னவா பேகன்.


நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவா லான்மெல் அறிஞா.


துய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேணடும் என்று சொன்னவா விவேகானந்தா.


வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயி ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் சொன்னவா அலெக்ஸிக்ச் காமல்.


எப்படி வேணடுமானாலும் வாழலாம் என்றில்லாம் இப்படித்தான் வாழ வேணடும் என்கிற கொளகையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள்.


இந்த இலட்சியத்தை தம்மானல் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான்.


தேவைற்ற பொருளகளை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உளள வீட்டு நணபாகளோ அல்லது அலுவலக நணபாகளோ அல்லது நீங்கள இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவாகளின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீகள. உங்கள வாத்தைகள எப்போதும் மென்மையாகவும் இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.

மற்றவாகளிடமிருந்து உதவியைப் பெற அவாகளுக்கு நீங்கள முதலில் உதவ வேணடும்.


உங்களிடமுளள குறைகளைக் குறைத்து நிறைகளைப் பெற எப்போதும் முயலுங்கள.


உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சனைகளை அணுகுங்கள.


படிக்கப் படிக்க மனம் விரவடையும் திறந்த மனம் வெற்றியின் விளைநிலம்.


பளளம்தான் மேட்டினை நிணயிக்கிறது.

குளளம் தான் உயாவினை வடிவமைக்கிறது.

இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.


தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொளள மறுப்பது தவறு.


ஒரு பக்கம் நீங்கள கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.


வெற்றி ஓ அனுபவம் என்றால் தோல்வியம் ஓ அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேணடும். உழைக்கத் தயங்கிக் கொணடேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி பயிற்சி உழைப்பு மகிழ்ச்சி நம்பிக்கை இவ்வைந்தும் வெற்றியின்

ரகசியங்கள்.


எதில் ஈடுபட்டாலும் மன உறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக்கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக்கொடுக்க வேண்டும்.


முயற்சி முயற்சி இவை கூடிக்கொண்டேயிருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும்.


முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது.


நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.

Sunday, March 2, 2008

சித்தர்கள்

சிவ சிவா வென்றாற் றிரு நடமாகும்

சிவ சிவா வென்றாற் சீவனும் முக்தியாம்

சிவ சிவா வென்றாற் சீவனும் சித்தியாம்

சிவ சிவா வாசி சிவசிவந் தானே!


சித்தர்


பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி, சக்தியிலிருந்துதான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.


சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.


சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.


சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.


சித்தம் என்பது புத்தி, மனம்,

சித்து புத்தியால் ஆகிற காரியம்

சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.


சித்தர்கள் 18 பேர்.


1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.


1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.


1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.


மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில் முக்கியமானவையாகும். சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை மேம்படுத்துவது) என்றனர். அதன் முலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம்.


ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும். அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர். அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான எஅ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர். அ. கிரியா சக்தி (பிராமி), உ. இச்சா சக்தி (வைணவி), ம். ஞானசக்தி (ரௌத்ரி) என்பது சித்தர் கருத்து.


சீக்கிரமே தருமம் செய் கொஞ்சம்

திருப்பணிகளும் செய்.

என்றார் சித்தர்.


அறப்பணியும், இறைபணியும் இறந்தும் இறவாப் பெரு வாழ்வளிக்கும்.


உன்னிடம் இல்லை என்று கேட்டு நிற்கும் எளியோரிடம் இருந்தும் இல்லை என்று சொல்லாதே. நாளை வா என்று தள்ளாதே. இருந்தால் அப்போதே கொடுத்துதவு.


நலிவுற்றவரை நசித்து வாழ என்னாதே. வஞ்சனை செய்ய முயலாதே. உன்னைத் தஞ்சமென்று வந்தடைந்தவரையே கெடுப்பதற்கு துணியாதே. உன் கண்ணில் பட்டதையும், காதில் விழுந்ததையும் உண்மை என்று கொள்ளாதே.


கற்புறைப் பெண்டிர் மீது காமசிந்தை வையாதே. கட்டியவளே என்றாலும் உற்றது சொல்லாதே. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து அவர்களுடைய அலட்சியத்துக்கு உள்ளாகாதே. கொலை, களவு, பொய் விலக்கு, தன்னை வியந்து கொள்கிறவனும் வலுச் சண்டைக்கு நிற்கிறவனும் காணாமல் போவான்.


சிந்தித்தால் தெளிவு வரும். சித்தர்களது பாடல்களைப் படித்தால் சிந்தனையும், தெளிவும் சேர்ந்து வரும்.


மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும், ஆத்மா ஒன்றுமாக ஆறறிவு. மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும், சீவனுமாக ஐந்து. பறவைகளுக்கு அறிவு முன்றே. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு. தாவரங்களுக்கு அறிவு ஒன்று என்று ஆராய்ந்து பின் மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே!.

ப்பொருள் வடிவும் ஓம் ஆகும்.


பதினெண் சித்தர்கள்


சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.



1. எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக் கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.


2. சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதை முடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.


3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில் பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.


4. போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்து பூரணத்தில் தங்கினார்.


5. கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடி கற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.


6. கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமல மலரில் சென்று பரவெளியில் கலந்தார்.


7. மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.


8. திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.


9. நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.


10. சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.


11. கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.


12. காலாங்கி

13. புண்ணாக்கீசர்

14. வியாக்ரபாதர்

15. கூனக் கண்ணர்

16. சிவவாக்கியர்

17. இடைக்காடர்

18. சண்டிகேசர்


ஆகியோர் வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார். இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.


உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்


உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்


உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்


றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.


திருமந்திரம் 725

எவ்வளவு அழகாக, அழுத்தமாக, ஆணித்தரமாக இங்கு சித்தர் நெறி பேசப்படுகிறது. அதுவும் திருமுலர் பிரானால்.


மாந்தர்களே! உங்களைப் போல் நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான். இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.


உடலே கோயில்! உள்ளுறையும் சீவனே சிவன்! என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் உடலை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கத் தொடங்கி விட்டேன் என்று உற்சாகத்தோடு கூறுகிறார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்


திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்


உடம்பை வளர்கும் உபாயம் அறிந்தே


உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே


திருமந்திரம் 724

இந்த உடம்பை அழிந்து விட்டால் உயிரும் அழிந்துபோகும். அதன் பிறகு ஞானத்தை உணர்வதெங்கே? அதனோடு சேர்வதெங்கே? அதனால் அரிதாகக் கிடைத்த இம் மானிடப் பிறவி வீணாகிப் போகுமன்றோ? அதனால் இந்த உடம்பை வளர்ப்பதற்காக உபாயங்களை அறிந்து பேணிப் பாதுகாக்கத் தொடங்கினேன். உடம்பைக் காப்பாற்றிக் கொண்டதன் முலம்தான் உயிரையும் காப்பாற்றிக் கொண்டேன் என்கிறார் திருமுலர்.


அழியக்கூடியது உடல் மட்டுமே. உயிர் அல்ல. ஆன்மாவுக்கு அழிவில்லை என்று சமயங்கள் கூறுகின்றனவே. கண்ணபிரான் கீதையில் இதைதானே அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். திருமுலர் உயிர் அழிந்துவிடும் என்று கூறியுள்ளது முரண்பாடல்லவா? என்று கேட்கலாம்.


உடல் இருந்தாலே உயிர் இயங்க முடியும். ஆன்ம விடுதலைக்காக உழைக்க முடியும். உடல் போய்விட்டால் அதன் பிறகு உயிருக்குச் செயல்பாட்டுத் திறன் ஏது? இந்த உண்மையையே ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார் திருமுலர்.



பிற சமயத்தவர்கள் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். அப்போதுதான் மெய்ஞ்ஞான நெறியில் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

// 5 //



அடக்கடக் கென்பர் என்ற சொல் நயம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று மற்றவர்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறந் தன்மையை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.


அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்.

அவர்களை ஏன் அறிவில்லாதவர்கள் என்று கூறுகிறேன் என்றால்


அஞ்சும் அடக்கம் அமரரும் அங்கிலை.

ஐம்புலன்களை அடக்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் கூறும் தேவலோகத்திலும் இல்லை. கடவுளின் முன்று உலகங்களிலும் இல்லை. பின் எதற்காக அப்பாவி மனிதனை மட்டும் அஞசும் அடக்கு அடக்கு என்று கூறுகிறீர்கள்?

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை

அஞ்சும் அடக்கி அசேதன மாமென்றிட்

டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே!

அஞ்சும் அடக்கினால் ஓரறிவும் இல்லாத சடப் பொருளாகி விடுவாய். (அசேதனம் = அறிவின்மை) அதனால் அஞ்சும் அடக்குவதால் பயனில்லை. அவற்றோடு கூடியிருந்தே வாழ்க்கைப் பயனை அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் என்கிறார் திருமுலர் பிரான்.


வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து விடமுடியும் என்பதே சித்தர் நெறி.


உடலைப் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.

தானென்ற வஸ்துவையும் தவிர வேறே

சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து

பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்

பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று

ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்

அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க

கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று

கூறாதே சூத்தரம் என்று சொல்லே.


அகஸ்தியர் வாத சௌமியம் 260.

இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக் கொண்டது. உணவு இல்லையென்றால் உடலும் இல்லை. அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப் பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.



Sunday, February 24, 2008

பாலித்தீன் உறைகள்

எனக்கு உயிர் கொடுத்தார்கள்
எத்தனை எத்தனை வடிவங்களில்
எத்தனை எத்தனை நிறங்களில்

என்னால் அவர்களுக்கு வருமானம்தான்
மக்களுக்கும் நான் பயன்படுகிறேன்
பயன்பாட்டின் காலம் குறைவு
என் அழிவின் காலமே இல்லையென்பதை
எப்போது யார் உணருவார்கள்

நான் காற்றிற்கு பட்டமாக
நிலத்திற்கு எதிரியாக
நீருக்குத் தடையாக
வான் மழைக்கு இடைஞ்சலாக
கால்நடைக்கு வி`மாக
உருவாக்கியவனுக்கு சவாலாக
எங்கும் எனது ராஜ்யமாக
இருந்துக் கொண்டிருக்கிறேன்

நான் செய்யும் தீமைகளைப் பார்க்க பார்க்க
எனக்கே அச்சமாக இருக்கிறது
நானே சொல்கிறேன்
என்னை எப்படியேனும் அழித்துவிடுங்கள்
முடியவில்லையென்றால்
என்னை உருவாக்காமலேயே விட்டுவிடுங்கள்
இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்
பாவம் இந்த உலகம் பிழைத்துவிட்டுப் போகட்டும்.